
நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் பயணிகளின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது வாட்ஸ் அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை. இதனால் பிற ஆன்லைன் தளங்கள் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக CMRL WhatsApp டிக்கெட் சேவை தற்காலிகமாக வேலை செய்யாததற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.