
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது.
நான்கு வீரர்களை தேடும் பணி வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நால்வரும் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.