காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் ஏர்போர்ட் அமைய இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் சென்று பொதுமக்களை கேரவேனில் இருந்தபடி சந்தித்து பேசினார். அப்போது அவர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் வைத்து தான் உங்களை சந்திக்க நான் திட்டமிட்டேன். ஆனால் என்னை ஊருக்குள் வருவதற்கு அனுமதிக்கவில்லை. அதேபோன்று சமீபத்தில் ஒரு துண்டு பிரச்சாரம் வழங்குவதற்காக கைது செய்தார்கள். இந்த இரு விஷயத்திற்கான காரணம் பற்றி எனக்கு புரியவில்லை என்றார். அதன் பிறகு பேசியவர் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது.

எனவே பரந்தூரில் ஏர்போர்ட்டை அமைத்தால் விவசாய நிலங்கள் அழியும் என்பதால் வேறு இடத்தில் விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூறினார். அதன் பிறகு ஆளுங்கட்சிக்கு பறந்தோரில் ஏர்போர்ட்டை தாண்டி ஏதோ ஒரு லாபம் இருப்பதாக விஜய் கூறினார். ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எதிர்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தற்போது இருக்கும் ஆளும் அரசு ‌ எடுப்பதாக கூறிய அவர் அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது 8 வழி சாலையை எதிர்த்தார்கள் என்றும் கூறினார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளை அழித்ததுதான். எனவே தற்போது ஏர்போர்ட் அமைத்தால் நீர்நிலைகள் அழியும் என்றார். மேலும் பரந்தூர் பகுதியில் ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஏராளமான நிலங்களை வாங்கியுள்ளதாக ஏற்கனவே குற்ற சாட்டுகள் இருக்கிறது. இந்த பரந்தூர் நில சர்ச்சையை இது வரை ஜீ ஸ்கொயர் நிறுவனம் மறுக்கவில்லை. இப்படி இருக்கையில் விஜய் ஆளும் கட்சிக்கு விமான நிலையத்தை தாண்டி ஏதோ ஒரு லாபம் இருப்பதாக கூறியுள்ளது சமூக வலைதளத்தில் பூதாகரமான பிரச்சினையாக வெடித்து விவாத பொருளாக மாறி உள்ளது.