மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு தமிழகம் வரும் நிலையில் நாளை பாஜக முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு இன்று இரவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முக்கிய புள்ளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே டெல்லி சென்று அமித்ஷாவை இபிஎஸ் நேரில் சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுக பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தமிழக பாஜக கட்சியின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அண்ணாமலை தான் தலைவர் பதவிக்கான போட்டியின் இல்லை என்று கூறிவிட்டதால் நிச்சயம் வேறு ஒருவர்தான் தலைவராக வருவார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் சமீபத்தில் இவர் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அதன்பிறகு சமீபத்தில் பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக வந்த போது அவர் ஒரே மேடையில் மோடியுடன் அமர்ந்திருந்தார்.

இதன் காரணமாக இவர் தான் அடுத்த புதிய தலைவர் என்று கூறப்படும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமித்ஷாவை நயினார் நாகேந்திரன் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்புக்கு பிறகு நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.