மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் சுஷந்தா கோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். இவர் கொல்கத்தா 108 ஆவது வார்டு கவுன்சிலர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அந்த சமயத்தில் இரு மர்ம நபர்கள் ஸ்கூட்டியில் வந்த நிலையில் அவர்கள் அங்கு வாகனத்தை நிறுத்தினார். அப்போது ஒருவர் திடீரென கவுன்சிலரை நோக்கி துப்பாக்கியால் இருமுறை சுட்டார். ஆனால் அவருடைய துப்பாக்கி சரிவர வேலை செய்யாததோடு குண்டு வெளியே வரவில்லை.

இதனால் கவுன்சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். உடனடியாக கோஷ் அந்த நபரை துரத்தினார். எப்படியோ அவரை விரட்டிப் பிடித்து அடித்து கொலை செய்ய சொன்னது யார் என்று கேட்ட நிலையில் தனக்கு கொலை செய்ய சொன்னது யார் என்று தெரியாது என்றும் உங்கள் புகைப்படத்தை கொடுத்து கொலை செய்ய சொன்னார்கள். ஆனால் அதற்காக பணம் எதுவும் தரவில்லை என்று கூறினார். பின்னர் அந்த நபரை அவர் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.