திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தம் அளித்தாலும் கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது அதிமுகவுக்கு வேலை பார்க்க முடியாது என இஸ்லாமிய சகோதரர்கள் கூறினார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் பாஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் கார்த்திக் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம் என பேசிய அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசுவது நல்லதற்கு அல்ல. பாஜகவுடன் கூட்டணி இல்லாததன் காரணமாகவே மாமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது. பாஜகவை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.