
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய அதிக வரி விதித்தால் அவர்களுக்கும் அதே அளவு வரி விதிப்போம் என எச்சரித்துள்ளார். அவர் பேசியதாவது, அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால் அதே அளவு வரி நாங்களும் விதிப்போம். ஏனென்றால் யாரேனும் நம் மீது வரி விதித்தால் நாம் அவர்களுக்கு வரி விதிக்க வேண்டியதில்லையா? இந்தியா எங்களிடம் 100% கட்டணம் வசூலித்தால் அதற்கு நாங்கள் எதுவும் வசூலிக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் 100 மற்றும் 200 வரி வசூல் செய்கிறார்கள். இந்தியாவும், பிரேசில் அதிக கட்டணம் வசூல் செய்கிறது.
இனி நாங்களும் அவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்க போகிறோம் என எச்சரித்துள்ளார். மேலும் நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களிடம் நாங்கள் நடந்து கொள்வோம் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் டொனால்ட் டிரம்ப். அவர் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கிய நாள் முதல் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அப்படி இருக்க அவர் இந்தியா விதிக்கும் வரிக்கு நிகராக வரியை விதிப்போம் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.