மகாராஷ்டிரா மாநிலம் துணைவியில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால் அதனை அலட்சியமாக விடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.