மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வருடங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் அந்த பெண்ணை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் தன்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.  மேலும் அந்த நபரின் தொல்லையால் ஒன்றரை வருடத்தில் மூன்று வீடுகள் மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.