உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிரிஷன் என்பவரது மகன் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கிரிஷனுக்கு தொலைபேசியில் பள்ளியிலிருந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனே தந்தையும் விடுதியில் தங்கி பயிற்று படித்து வந்த தனது மகனை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு மகனை காணாமல் விசாரித்த போது பள்ளி இயக்குனர் தினேஷ் காரில் சிறுவனை தூக்கிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை கண்டுபிடித்து அவரது காரை சோதனை செய்தபோது சிறுவன் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தான்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் சேர்ந்து சிறுவனை நரபலி கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முடிவு செய்திருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.