ஐரோப்பிய நாடான குரேஷியாவின் தலைநகர் சாக்ரேப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இன்று நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 7 வயது சிறுமி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.