
மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்து செல்லலாம், ஆனால் வகுப்பறைகளில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.
வகுப்பறைக்கு செல்லுமுன் ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் இவ்வாறு ஆந்திர அரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. பள்ளி வகுப்பறைக்குள் செல்லும் முன், ஆசிரியர்கள் அனைவரும் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது