ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களில் சிலவற்றை தீ வைத்து எரித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து உதய்பூரில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றவாளியின் வீடு  அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.