உத்தர் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் இருந்து காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த காணொளியில் ஆசிரியர் ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு குடிபோதையில் நாற்காலியில்  அமர்ந்துள்ளார். அவரால் நிமிர்ந்து கூட அமர முடியவில்லை.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் அந்த ஆசிரியர் இதுபோன்று மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது புதிது அல்ல என்றும் எப்போதும் அவர் இப்படி தான் நடந்து கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காணொளி வைரலானதை தொடர்ந்து மது போதையில் இருந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.