
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ராஜாங்குலம் என்ற பகுதி உள்ளது. இங்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் 250 கிராம் கஞ்சா, 100 கிராம் எடையுள்ள 15 போதை மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவற்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சிலம்பரசன், மணிகண்டன், தினேஷ், செல்வகுமார், நவீன் ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்கள் ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.