
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல இடங்களில் நாய் கடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 10 வயது சிறுவனை தெருநாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கௌரிநாத். இவர் நண்பர்களுடன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் தாக்கியுள்ளது. இதனையடுத்து சிறுவனின் கூச்சல் கேட்ட அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி விட்டனர். நாய் தாக்கியதில் சிறுவனின் தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.