
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பணி நேரத்தின்போது தூங்கி வழிந்தார். அந்த ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் தூங்கி வழிந்த நிலையில் சில மாணவர்கள் அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
मेरठ के एक जूनियर हाई स्कूल में एक वीडियो वायरल हो रहा है, जिसमें एक शिक्षिका कक्षा के अंदर गहरी नींद में सोती हुई नजर आ रही हैं। इस घटना ने शिक्षा व्यवस्था पर सवाल उठाए हैं। वीडियो के वायरल होने के बाद लोग नाराजगी जाहिर कर रहे हैं और चिंता व्यक्त कर रहे हैं कि अगर शिक्षक अपनी… pic.twitter.com/a6UCcDeZ2r
— AajTak (@aajtak) April 8, 2025
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த ஆசிரியை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.