குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் வேகமாக வந்த வேனல் இருந்து இரண்டு மாணவிகள் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வேன் டிரைவர் கவனக்குறைவால் இருந்ததால் சிறுமிகள் காயம் அடைந்தனர். மாணவர்களை ஏற்றி  கொண்டு சென்ற போது திடீரென பள்ளி வேனின் பின் கதவு திறந்து உள்ளது.

அப்போது ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுமிகள் திடீரென்று கீழே விழுந்தனர். இதனால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தார்சாலி வீதியில் உள்ள துளசிசம் சொசைட்டி வழியாக வேன் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.