திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தற்போது தமிழ் கடவுள் முருகன்  மாநாடு நடைபெற்று வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகள் பலரும் மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசு  தலையிடுவது நல்லதாக தெரியவில்லை என தங்களது விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். சிலர் இந்த மாநாடு நிகழ்வு பாராட்டக்கூடியது என தங்களது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இப்படி மாநாடு குறித்த பல கருத்துக்களும், புகைப்படங்களும் இணையத்தில்  தொடர்ந்து வெளிவர, தற்போது அந்த காலத்தில் திமுக நடத்திய பழனியில் திராவிட சமுதாய சீர்திருத்த மாநாடு குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ்பெற்ற நிர்வாகிகள் இருப்பதை காண முடிகிறது இதோ அந்த வீடியோ காட்சி :