பழம்பெரும் மலையாள நடிகர் மாமுக்கோயா இன்று காலமானார். இவருக்கு வயது 76. கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு மரணத்திற்கு காரணமானது.

இந்த வருடம் மார்ச் 26ஆம் தேதி திரையுலகம் பிரபல நடிகர் இன்னசென்ட்டை இழந்த சில நாட்களில் பிரபல நடிகரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் பிரபல நடிகரான இவர் 450-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.