
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியானது தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சுற்றுகளில் இந்திய அணியானது வெற்றியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தற்போது ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது கே.எல் ராகுலை வைத்ததுதான். இவர் சாம்பியன் டிராபியில் கலந்து மூன்று நிமிஷம் இரண்டு முறை 40க்கும் அதிகமான ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
சுழலுக்குசாதகமான பிட்சில் கூட 96.36 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருக்கிறார். இப்படி இவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ராகுலின் பேட்டிங் இடம் மாற்றப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்தபோது கம்பீர் மற்றும் கோலிஇடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அடுத்த சீசனில் கம்பீரை ஆலோசகர் பதவியில் இருந்து லக்னோ அணி நீக்கியது.
கோலியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தான் கே.எல் ராகுல் அதிருப்தி அடைந்து கம்பீரை அணியை விட்டு நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பிசிசிஐ இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், பழைய பகை காரணமாக கேஎல் ராகுல் இடம் மாற்றப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.