ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் விவரம் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் ஆனந்த் நாக் மாவட்ட காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.