
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பைசல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு தற்போது அந்த மாநில நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உள்ளது. அதாவது வழக்கு முடியும் வரை இரு முறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட வேண்டும்.
அதோடு வழக்கு முடியும் வரை தினசரி தேசியக்கொடிக்கு 21 முறை சல்யூட் அடிக்க வேண்டும். சல்யூட் அடிக்கும் ஒவ்வொரு முறையும் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் நீதி மன்றம் இப்படி ஒரு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.