உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்த நிலையில் விசா சலுகை உள்ளிட்டவைகளையும் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இனி பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒருபோதும் இருதரப்பு தொடர்களில் விளையாடாது என்று பிசிசிஐ துணை தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது, நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் எப்போதும் துணை நிற்போம். எங்கள் அரசாங்கம் சொல்வதை கண்டிப்பாக நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இனி இருதரப்பு தொடர்களில் விளையாடப் போவது கிடையாது. இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாட போவது கிடையாது. மேலும் ஐசிசி விளையாட்டைப் பொறுத்தவரை அவர்களின் நிலைப்பாட்டை பொருத்து நாங்கள் விளையாடுகிறோம் என்று கூறியுள்ளார்.