
பிரபல நடிகை சனம் செட்டி கோவையிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் விமானத்தில் ஏறும்போது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் தன்னுடைய உடைமைகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இருவரின் பைகள் மற்றும் உடைமைகளை மட்டும் சோதனை செய்ததாக பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனம் செட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சோதனை செய்வதாக இருந்தால் அனைவரையும் சோதனை செய்ய வேண்டியது தானே.
ஆனால் மதத்தை பார்த்து குறிப்பிட்ட சிலரின் உடமைகளை மட்டும் சோதனை செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று வீடியோவில் பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் விமான நிலையத்தின் அதிகாரிகள் குடியரசு தின விழா வருவதால் அனைத்து பயணிகளையும் சோதனை செய்வதாகவும் விமானத்தில் ஏறிய பிறகு குறிப்பிட்ட பயணிகளை மட்டும் தேர்வு செய்து சோதனை செய்வதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
Stop discriminating based on religion, name, dress code @airindiain .
What's your criteria for random checks? #airindia #securityexcuse pic.twitter.com/JHcOAEQ2N8— Sanam Shetty (@ungalsanam) January 15, 2023