பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டியில் சொதப்பினர். இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் பாகிஸ்தான்  அணி ஒரு அணியே கிடையாது எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து பல்வேறு முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணி மீது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது பாக். முன்னால் வீரர் அகமது ஷஷாத்தும் அந்த அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் அணி தொடர்பாக கேரி கிறிஸ்டன் கூறியது உண்மை எனில் அதை எண்ணி அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. ஏனெனில் உலகக் கோப்பை முழுவதுமாக நாங்கள் இதைத்தான் கூறி வருகிறோம். பாகிஸ்தான் அணி குழுவாக செயல்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வீரர்கள் தண்டிக்கப்படுவது மட்டும்தான் இந்த பிரச்சனைக்கான ஒரே தீர்வு. அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான பாடம். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இதை கவனிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.