மகாராஷ்டிரா மாநிலம் பீவாண்டியில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கபில் பாட்டீல் என்பவர் தோல்வியை சந்தித்தார். இங்கு சரத் பவாரின் வேட்பாளர் சுரேஷ் மத்ரே வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஷாபூரை சேர்ந்த சஞ்சய் என்பவர் தன்னுடைய தலைவரின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கபில் பாட்டீல் தான் வெற்றி பெறுவார் என இவர் எப்போதும் எல்லோரிடமும் கூறிவந்துள்ளார். ஆனால் அவர் தோல்வி தோற்ற நிலையில் சஞ்சய் உயிரிழந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன், மனைவி உள்ளனர்.