
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு வெளியாகலாம். INDIA கூட்டணி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
உ.பி., மகாராஷ்டிரா, மே.வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்களை வெல்ல பாஜக கூட்டணி தவறியுள்ளது. உ.பி.,யில் பாஜக கூட்டணி 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2019இல் மகாராஷ்டிராவில் 41 இடங்களை வென்ற NDA கூட்டணி இம்முறை 17 இடங்களில் மட்டுமே வென்றது. அதேபோல, NDA கூட்டணியின் வெற்றி மே.வங்கத்தில் 12 இடங்களிலும், பிஹாரில் 29 தொகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்டது, அதன் 400+கனவை சிதைத்தது.