
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு பேசிய ஓபிஎஸ், பாஜகவுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலை சந்திப்பது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக பாஜக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.