
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடந்த நிலையில் தற்போது அது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, விஜயின் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை இதுவரை நான் எந்த ஒரு கட்சிக் கூட்டத்திலும் பார்த்ததில்லை. விஜய் பேசுவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் புல்லரித்தது. பாஜகவை பெயர் சொல்லாமல் பெயிண்ட் டப்பா என்று விமர்சித்துள்ளார். திமுகவை நேரடியாகவே விமர்சித்து விட்டார்.
பெரியாரின் கடவுள் மரபு கொள்கைகளை ஏற்க மாட்டேன் என்று சொல்வதற்கே ஒரு தில்லு வேண்டும். முதலில் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த போது அதை நான் ரசித்தேன். ஆனால் அதன் பிறகு கமல்ஹாசன் மாறிவிட்டார். இதேபோன்று நடிகர் விஜய்யும் மாறிவிடாமல் கடைசிவரை தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மேலும் விஜய் புதியவர் அவர் அரசியலுக்கு என்ன செய்வார் என்று பலர் விமர்சித்த நிலையில் தன் பேச்சின் மூலம் அவர் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.