
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அதற்கான பணிகளை தொடங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில் தம்பி விஜய் புத்திசாலி, அவர் அரசியலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணிக்கு விஜயை அழைக்க மாட்டேன் என்றும் அவர் ரொம்ப புத்திசாலி, அவருக்கு அறிவுரையை தேவையில்லை என்றும் புகழ்ந்து கூறினார். மேலும் NCW தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு எந்த அழுத்தமும் காரணம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.