
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் தீவிர பாஜக ஆதரவாளர் துர்கேஷ் பாண்டே (30) என்பவர் கடந்த ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலில் முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததை பார்த்து காளிதேவி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
அதன் பிறகு மாலையில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வென்று விட்டது. இதனைத் தொடர்ந்து தான் வேண்டியபடி தனது இடது கைவிரலை வெட்டி காளிதேவி கோவிலில் காணிக்கை செலுத்தினார். அப்போது அவருடைய கையில் வந்த ரத்தத்தை நிறுத்த துணியை சுற்றியுள்ளார். அது பலன் அளிக்காத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.