
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னெப்போதும் இல்லாததை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தனித்து 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் தனித்து 93 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. என்டிஏ கூட்டணி 280க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணியானது 220க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.