
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். நடிகை சமந்தா ஓரளவுக்கு நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு தற்போது நடிப்பில் வேகம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆவதாகவும், நோய் குணமாக தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றும் சமந்தா இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகளை கூட என்னால் உட்கொள்ள முடியவில்லை. மாத்திரைகளை மட்டுமே உணவாக பல நேரங்களில் எடுத்துக் கொண்டு என்னை பாடாய்படுத்தியது.
இந்த ஒரு வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தேன். ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் கேட்டு அல்ல. வலிமையையும், அமைதியையும் கொடுக்க வேண்டினேன். எதுவும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை இந்த ஒராண்டு காலம் எனக்கு உணர்த்தியது” என தெரிவித்துள்ளார்