பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து சிதறி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துகண்மாயில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பன்னீர்செல்வம் படுத்துக்கொண்டே ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ப்ளூடூத் ஹெட்செட் வெடித்தது. இதனால் அவரது காதில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பன்னீர்செல்வத்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெட்செட் வெடித்து முதியவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.