கர்நாடகாவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு தலைவர்கள் அங்கு இருக்கும்போதே தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமானம் நேர்ந்ததைக் கண்டு கொந்தளிக்கின்றனர். கர்நாடாகா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடையில் வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா‌ பாட வைத்தார்.

அப்போது ஏன் அண்ணாமலை அமைதி காத்தார்..? எனும் கேள்வி அனைவருக்கும் எழுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்காக 153, 153A, 171G, 505, 120B, 123 போன்ற பிரிவுகளின் கீழ் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ந்த அவமானம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.