தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் பாத்திரத்தில் உணவு வழங்க மறுத்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

பட்டுகோட்டையை சேர்ந்த சக்தி காந்த் என்ற சமூக ஆர்வலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர் பட்டுக்கோட்டை பெரிய தெருவில் இருக்கும் ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக தனது மகனை பாத்திரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே உணவு பொருட்களை வழங்குவோம் என ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் நேரில் சென்ற சக்திகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் பாத்திரத்தில் உணவு வழங்க மறுத்த ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்தி காந்த் வலியுறுத்தியினார். சக்தி காந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.