
மத்திய பிரதேச மாநிலத்தில் மொரேனா என்ற மாவட்டம் உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாத்திரத்தை தேய்த்து கழுவுவது போன்று துப்பாக்கிகளை தேய்த்து கழுவுகிறார். இந்த வீடியோ காட்டுத்தீ போல் பரவிய நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு ஆயுத தொழிற்சாலை பற்றி காவல்துறையினருக்கு தெரிய வந்தது. அந்த தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் சக்தி கபூர் மற்றும் அவருடைய தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் வீடியோவில் இருந்த பெண்ணை தேடி வருகிறார்கள். இவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.