நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் ஒரு அணியே கிடையாது அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது என்று கூறியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சர்ச்சைகளே இன்னும் அடங்காத நிலையில் தற்போது பாக் வீரர்கள் பஞ்சு மெத்தையில் பீல்டிங் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது இன்னும் 6 மாதங்களில் ஐசிசி சாம்பியன்ஸ் தொடர் நடைபெற இருப்பதால் தற்போது வீரர்களுக்கு பிட்னஸ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் பீல்டிங் பயிற்சி வழங்கி வந்தனர். அப்போது தரையில் விழுந்தால் அடிபடும் என்பதால் அவர்கள் பஞ்சு மெத்தையை மைதானத்தில் வைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ வெளியான நிலையில் அந்நாட்டு ரசிகர்களே அவர்களை கேலி செய்து வருகிறார்கள்.