
சென்னை மாவட்டம் மதுரவாயில் ஜானகி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகள் ஏஞ்சல் இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஏஞ்சல் பாத்ரூமில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஏஞ்சலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஏஞ்சல் ஆவடி அருகே சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்துள்ளனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு இருசக்கர வாகனத்தை வாங்கிச் செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் அரசு பேருந்தில் வீட்டுக்கு வந்து பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.