பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளியில் ஆசிரியர் தின விழாவின் போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார். அதோடு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பாதபூஜை செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறியதற்கு தமிழிசை  சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஆன்மீகம் இல்லாத அரசியல் தற்போது செய்ய முடியாது. பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான குழப்பங்கள் இருக்கிறது. அசோக் நகர் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆசிரியர்கள் பலிகடாக ஆக்கப்படுகிறார்கள். மேலும் பாத பூஜை செய்வது என்பது நம்முடைய கலாச்சாரம் என்பதால் அதை அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினார்.