
இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் கீழ் பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அதனை தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இது ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. இருந்தாலும் இதுவரை இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை இணைக்கலாம்.
இல்லையென்றால் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விலக்கு/அதிக விகிதத்தில் செலுத்தப்படும். வருமான வரி இணையதளத்தில் உள்ள லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்து உங்களுடைய விவரங்களை சரி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.