
உஸ்மான் கவாஜாவின் அழகான மகள் பாபர் அசாமை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது..
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி, அதாவது இன்று இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணிக்கு இது முக்கிய போட்டியாகும்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி மெல்போர்னில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இரு அணி வீரர்களும் பயிற்சியின் போது சந்தித்து கொண்டனர். மேலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாகிஸ்தான் அணி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து இனிப்புடன் பரிசு வழங்கியது. அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் தங்கள்து குடும்பத்துடன் இருந்தனர். அதேபோல உஸ்மான் கவாஜா தனது அருமை மகளுடன் இருந்தார்.
உஸ்மான் கவாஜா பாகிஸ்தான் வீரர்களுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த போது அவரது மகள் சென்று பாபர் அசாமை கட்டிப்பிடித்தார். பாபரும் உஸ்மானின் மகளை கட்டிப்பிடித்தார். உஸ்மான் கவாஜாவின் அழகான குட்டி தேவதையின் இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.
முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது :
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்கம் சிறப்பானதாக இல்லை. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 1-0 என தொடரில் பின்தங்கியுள்ளது. இப்போது இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி வலுவான மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Babar Azam hugged Usman Khawaja's daughter in the nets. pic.twitter.com/IyXuo5on1b
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 25, 2023
A very cute moment between Babar Azam and Usman Khawaja's daughter ♥️♥️ #AUSvPAKpic.twitter.com/GP5NhpJ95f
— Farid Khan (@_FaridKhan) December 25, 2023