பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

நவீன கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அதிகம் பேசப்படும் வீரர். இருவரும் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிக்கு சிறந்த வீரர்கள். இதன் காரணமாக பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இடையே அவ்வப்போது ஒப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் மற்றும் டாம் மூடி இருவரும் பாபர் அசாம் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான ஒப்பீடு குறித்து தங்கள் நேர்மையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கூற்றுப்படி: இருவரும் மிகச் சிறந்த வீரர்கள் ஆனால் விராட் கோலியை விட பாபர் அசாம் சற்று அனுபவம் குறைந்த வீரர். விராட் கோலிக்கு பல வருட அனுபவம் உள்ளது. அவர் இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 ரன்கள் சராசரியில் 12,898 ரன்கள் குவித்துள்ளார்.

மறுபுறம், 108 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பாபர் அசாம் 58 ரன்கள் சராசரியில் 5142 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். எனவே தற்போது விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிடுவது எனக்கு சரியாக தெரியவில்லை. விராட் கோலி தான் ஒரு சேசிங் மாஸ்டர் என்பதை காலங்காலமாக நிரூபித்து வருகிறார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

 இதேபோல், இருவரையும் ஒப்பிடுவது குறித்து டாம் மூடி கூறியதாவது: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலியை நினைவுபடுத்துகிறார். ஏனென்றால் பாபர் அசாம் மிகச் சிறப்பாக கிரிக்கெட் ஷாட்களை ஆடுகிறார். போட்டி நிலவரத்தை கணிப்பதால் பாபர் அசாம் கண்டிப்பாக விராட் கோலியை போல் சிறந்த வீரராக வர முடியும் என டாம் மூடி கூறியது குறிப்பிடத்தக்கது.