
குழந்தைகள் செல்ல பிராணிகளுடன் விளையாடுவார்கள் குழந்தைகளுக்கு பூனை நாய் என்றால் பிடிக்கும். சோசியல் மீடியாவில் செல்லப் பிராணிகளுடன் விளையாடும் வீடியோ வைரலாகும். ஒரு சில நேரம் வித்தியாசமான வீடியோக்களும் அதிகம் பகிரப்படும். அந்த வகையில் ஒரு சிறுமி ஒரு கையில் ஐஸ் கிரீமையும், மற்றொரு கையில் தவளையையும் பிடித்துள்ளார்.
அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. சிறுமி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தவறுதலாக ஐஸ்கிரீமுக்கு பதிலாக தவளையை சாப்பிட முயல்கிறார். பின்னர் அது தவளை என்பதை உணர்ந்து தவளை மீது துப்பினார். பின்னர் மீண்டும் ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram