
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அரக்கோணம் தொகுதியில் தோல்வி அடைந்தது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சி தலைமை நிர்வாகம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறலாம் என நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதேபோன்று அரக்கோணம் போன்ற தொகுதிகளில் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும் என கூறினர். மேலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர்களின் ஆதரவாளர்களை அதிமுக கட்சிக்குள் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.