
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் சாடத் கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது. மிக்கி என அழைக்கப்படும் 30 வயதுடைய அமித் என்ற இளைஞர், சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பி இரவு உணவுக்குப் பிறகு வழக்கம்போல் தூங்கச் சென்றார். ஆனால் ஞாயிறு காலை 5.30 மணியளவில் அவரது குடும்பத்தினர் அவரை எழுப்ப வந்த போது, அவர் அசையாத நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை எழுப்ப முயற்சி செய்த போது, அவரது உடலின் கீழே ஒரு பாம்பு சுருண்ட நிலையில் இருப்பதும், உடலில் பத்து பாம்பு கடி காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த சோகமான காட்சியை கண்ட குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து அண்டை வீட்டு வாசிகள் ஓடி வந்து பார்வையிட்டனர். மஹ்மூத்பூர் சிகேடா என்ற இடத்திலிருந்து அழைக்கப்பட்ட பாம்பு பிடிப்பவர் பாம்பை பிடித்து சென்றார். பின்னர் அமித்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது அப்போது அவர் பாம்பு கடித்து சாகவில்லை என்றும் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
அதாவது அவருடைய மனைவிதான் தன்னுடைய கள்ளக்காதலுடன் சேர்ந்து தன் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் பாம்பு கடித்தது போல் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு விஷப்பாம்பை வாங்கி படுக்கையில் வைத்தது தெரியவந்தது. அதாவது கூலி வேலை செய்து வரும் அமித் என்பவரின் நண்பருடன் அவருடைய மனைவி ரவிதா கள்ள உறவில் இருந்துள்ளார். ஒரு வருடமாக அவர்கள் கள்ள உறவில் இருந்த நிலையில் இதைப்பற்றி அமித்திற்கு தெரிய வந்ததால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதனால்தான் அவர் தன் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டி உள்ளார். அவர்கள் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து விசாரணையில் எடுத்து வருகின்றனர்