
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் பதான் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் தற்போது புதிய வசூல் சாதனை தொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியீட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

அதன்படி பதான் திரைப்படம் ரூ. 1000 கோடி வசூலித்துள்ளது. இந்த தகவலை பட குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. பதான் திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சர்ச்சைகளை எல்லாம் தாண்டி பதான் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. பாலிவுட் சினிமாவில் சமீப காலமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.
மேலும் பாலிவுட் சினிமாவில் சமீப காலமாகவே பாய் காட் கலாச்சாரம் தலை தூக்கிய நிலையில் ஷாருக்கானின் பதான் திரைப்படத்திற்கும் பாய் காட் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானது. கடந்த 2 வருடங்களாகவே பாலிவுட் சினிமாவில் #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாரது. ஏற்கனவே பதான் படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தான் படத்தின் வசூல் பாதிப்படையுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில் பாய் காட் கலாச்சாரத்திற்கு பாய் பாய் என்று சொல்லும் அளவுக்கு படம் ரிலீஸ் ஆகி 27 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. நடிகர் ஷாருக்கானின் பதான் வசூலை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகிறார்கள்.
💥 #Pathaan hits 1000 crores worldwide 💥
Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBjCelebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd
— Yash Raj Films (@yrf) February 21, 2023