
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 4 வருடங்களுக்கு பிறகு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ஜீரோ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது 4 வருடங்களுக்கு பிறகு பதான் ரிலீஸானதால் ஷாருக்கான் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜான் ஆபிரகாம் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி முதல் நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வடிவந்துள்ளது. உலகம் முழுவதும் பதான் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் பதான் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானதால் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் ட்ரெண்டானது. ஆனால் சர்ச்சைகள் மற்றும் பாய்காட் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடிகர் ஷாருக்கானின் படம் சதம் அடித்தது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஹேய் பாய்காட் வெறியர்களே. உஷ் உஷ். கிங் ஷாருக்கான் மீண்டும் வந்து விட்டார். ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பேஷ்ரங் என்ற சர்ச்சை பாடல் ஹேஷ்டேக் ஆகியவற்றுடன் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பதான் படத்தின் வெற்றிக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Hey #BoycotBigots Shhhhhhhhh … #HallaBol King Khan @iamsrk is back.. keep rocking @deepikapadukone #JohnAbraham and team #Pathan ..#BesharamRang 👍👍👍👍👍
— Prakash Raj (@prakashraaj) January 25, 2023