2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற்றது. இதில் அதானியின்  விவகாரத்தினால் பாராளுமன்றத்தின் அவைகளை எதிர்க்கட்சிகள் முடக்கின.

இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம்  தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த கூட்டதொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “ஆக்கபூர்வமான விவாதத்திற்கு தான் தயார் என்றும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் அணைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.